search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனிவேல் தியாகராஜன்"

    • பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
    • அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பான நிதித்துறையை யாருக்கு வழங்குவது என விவாதம் எழுந்தபோது அதற்கு தகுந்த நபராக பழனிவேல் தியாகராஜன் திகழ்ந்தார்.

    பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். நிதிச்சுமையை எவ்வாறு குறைப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

    காகிதம் இல்லாத பட்ஜெட்டை உருவாக்கியும், பல்வேறு துறைகளில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்தார்.

    இந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தி.மு.க.வின் தொழில்நுட்ப மாநில செயலாளர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விடுவிக்கப்பட்டார்.

    சமீபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பேட்டியின் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை அரசியல் தொடர்பாக அங்கு உள்ள அமைச்சருக்கும், இவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது.

    இதற்கிடையே அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும், கடக்க போகும் பாதை குறித்தும் புத்தகம் எழுத இருந்தார். இதுகுறித்து புத்தாண்டில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் 2023-ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நேரம் இது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் மதிப்பையும், புதிய நம்பிக்கைகளுக்கான உறுதிமொழியையும் ஏற்கும் நேரம் இது. நான் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தை எழுத தொடங்கி உள்ளேன்.

    அரசியலில் இருந்து வெளியேறிய பிறகு அந்த புத்தகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த டுவிட்டர் வெளியானதும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வதந்தி பரவியது. இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதற்கிடையே பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவிட்டு அதற்கு ஒரு விளக்கமும் அளித்துள்ளார். நான் வெளியிட்ட டுவிட்டர் பதிவு தற்செயலானது. என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை வைத்து சிலர் வேறுமாதிரி புரிந்துள்ளனர். நான் எழுதும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்காக மன்னிக்கவும்.

    இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது என்பதால் அவ்வாறு தெரிவித்தேன். ஒவ்வொரு அமைச்சரும் ஒருநாள் அலுவலகத்தை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் டுவிட்டரில் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார்.

    • 200 நாட்களாக விலை குறைக்கப்படாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது
    • சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயரும். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை.

    கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்தாலும் கூட, பெரிய அளவில் விலை குறைக்கப்படவில்லை. அந்த வகையில் 200 நாட்களாக விலையை குறைக்காமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 200 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் உள்ளது.

    இதனை தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்/ டீசல் விலை அதற்கு இணையாக குறையாமல் இருக்கிறது. இந்தியாவில் சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதுபோல உள்ளது, என்று அவர் கூறி உள்ளார்.

    இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும், ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

    • திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
    • வன்முறை கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

    தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

    தாக்குதல் நடந்த வீடியோக்களை பார்க்கும்போது எதுவுமே உணர்ச்சிவயப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பதும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது.

    அதுவும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, கொடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

    அதிகார வெறியோடு கிடைப்பதில் எல்லாம் அரசியல் செய்யும் பாஜகவினர், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செய்வதில் கூட தங்கள் அரசியல் லாபத்தை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    இதுவரை தாக்குதல் நடத்திய கும்பலை பாஜக தலைவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக, வன்முறையை மேலும் தூண்டும் விதமாக சமூக ஊடகப் பதிவுகளையே செய்து வருகிறார்கள்.

    எனவே, தமிழ்நாடு காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    பாஜகவினரின் அரசியல் நாகரீகமற்ற இந்த அராஜகமான வன்முறைச் செயலை பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது,

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக வெற்று தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
    • ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திமுக வெற்று தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

    இந்நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார்.

    ×